தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ த.வெ.க., நிர்வாகி சிறையிலடைப்பு; உறவினர்கள் மறியல் 15 பேர் கைது

 த.வெ.க., நிர்வாகி சிறையிலடைப்பு; உறவினர்கள் மறியல் 15 பேர் கைது

 த.வெ.க., நிர்வாகி சிறையிலடைப்பு; உறவினர்கள் மறியல் 15 பேர் கைது


ADDED : ஜூலை 15, 2026 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட த.வெ.க., நிர்வாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட உறவினர்களில், 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை மலையப்பன் நகரை சேர்ந்த, 25 வயது பெண், மெடிக்கலில் பணிபுரிந்து வருகிறார். இவரிடம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய, த.வெ.க., செயலர் ரமேஷ், நேற்று முன்தினம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

இதையறிந்த அப்பகுதி மக்கள், ரமேஷுக்கு தர்ம அடி கொடுத்தனர். காயமடைந்த ரமேஷ், முசிறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

இதுகுறித்து, அப்பெண் அளித்த புகார்படி, நேற்று மாலை, 5:00 மணிக்கு, குளித்தலை போலீசார், ரமேஷை கைது செய்து, குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.

தகவலறிந்த, த.வெ.க., பொறுப்பாளர்கள் மற்றும் உறவினர்கள், போலீஸ் ஸ்டேஷன் சென்று, ரமேஷை எங்களிடம் காட்ட வேண்டும் என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மறியலை கைவிட

மறுத்ததால், நான்கு பெண்கள் உட்பட, 15 பேரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us