/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஸ்மார்ட் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை: எம்.பி., ஜோதிமணி

ADDED : ஜன 04, 2024 11:26 AM
கரூர்: ''தமிழகத்தில் பல மாவட்டங்களில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு, மத்திய அரசு அனுமதி தராமல் உள்ளது,'' என, கரூர் காங்.,-- எம்.பி., ஜோதிமணி தெரிவித்தார்.
கரூர் அருகே, தான்தோன்றிமலையில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சியில் விமான நிலையம் விரிவாக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதை தொழில் அதிபர் அதானிக்கு வழங்கவே, பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு, மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. தமிழகத்தை பேரிடர் பாதித்த மாநிலமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க வேண்டும். தமிழகத்துக்கு கல்வி, வீட்டு வசதி உள்ளிட்ட, பல்வேறு துறைளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. குறிப்பாக, தமிழகத்தில் கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஸ்மார்ட் திட்டத்துக்கு, மத்திய அரசு அனுமதி தராமல் உள்ளது.
இவ்வாறு கூறினார்.