ADDED : ஜூலை 08, 2026 05:23 AM

கரூர்:கரூர்
அருகே வெண்ணெய்மலை அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள
குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாமை, கலெக்டர்
முத்துக்குமரன் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய
குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், ஆதரவற்ற மற்றும்
பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் அரசின் நலத்திட்டங்களை எளிதில்
பெறும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பு சான்றிதழ் வழங்கும்
முகாம் நடத்தப்படுகிறது. இதில் பிறப்பு சான்றிதழ், வருமான
சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சமூக சான்றிதழ் உள்ளிட்டவை விரைவாக
வழங்கப்
படுகின்றன.
இதன் மூலம் குழந்தைகள் கல்வி,
உதவித்தொகை, மருத்துவம் மற்றும் பிற அரசு நலத்திட்டங்களை, தடையின்றி
பெற வழிவகை செய்யப்படுகிறது. முகாமில் மூன்று குழந்தைகளுக்கு
ஆதார் அட்டை, 9 குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ், 5 குழந்தைகளுக்கு
வங்கிக் கணக்கு, 11 முதியோருக்கு ஆதார் அட்டை, 25 முதியோருக்கு ஜாதி
சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்துள்ளனர். மேலும், 10
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அட்டை, 37 மாற்றுத்திறனாளிகள்
ஜாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திலகவதி உடனிருந்தனர்.
