தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாவட்ட அளவில் சிலம்பம் அரவக்குறிச்சி மாணவர் தேர்வு

மாவட்ட அளவில் சிலம்பம் அரவக்குறிச்சி மாணவர் தேர்வு

மாவட்ட அளவில் சிலம்பம் அரவக்குறிச்சி மாணவர் தேர்வு


ADDED : ஜூலை 08, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அரவக்குறிச்சி குறுவட்ட மைய போட்டிகளில், சிலம்பத்திற்கான தேர்வு குளத்துப்பாளையம் ஸ்டார் மெட்ரிக் பள்ளியில் தொடங்கியது. இதில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் வெற்றிவேல், ஒற்றைக்கம்பு சுற்றுதலில் குறுவட்ட மைய அளவில் முதலிடம் பெற்று, மாவட்ட போட்டிக்கு தேர்வானார். மேலும் கம்பு சண்டை போட்டியில், 35 கிலோ எடை பிரிவில் முகமது அர்ஷத் மர்சூக் இரண்டாமிடமும் முகமது தவ்பீக் மூன்றாம் இடமும் பெற்றனர்.

இரட்டை கம்பு பிரிவில், பள்ளப்பட்டி உருஸ் நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் முகமது அப்துல் ஷபீக் முதலிடம் பெற்று, மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 30 கிலோ எடை கம்பு சண்டை பிரிவில், விமல்ராஜ் மூன்றாமிடம் பெற்றுள்ளார். இரு பள்ளி

களிலும் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சங்கர், பட்ட

தாரி ஆசிரியர் சகாயவில்சன் ஆகியோரை, வட்டார கல்வி அலுவலர்கள் சகுந்தலா, வரதராஜ், தலைமை ஆசிரியர் சாகுல் அமீது ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us