/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முதல்வரின் உழவர் நல சேவை மையம் தொடங்க விவசாயிகளுக்கு அழைப்பு
/
முதல்வரின் உழவர் நல சேவை மையம் தொடங்க விவசாயிகளுக்கு அழைப்பு
முதல்வரின் உழவர் நல சேவை மையம் தொடங்க விவசாயிகளுக்கு அழைப்பு
முதல்வரின் உழவர் நல சேவை மையம் தொடங்க விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : டிச 27, 2025 05:09 AM
குளித்தலை: குளித்தலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா விடுத்துள்ள அறிக்கை:
கரூர் மாவட்ட தோட்டக்கலை துறை மூலம், முதல்வரின் உழவர் நல சேவை மைய திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் இளநிலை விவசாயம், தோட்டக்கலை, வேளாண் அல்லது பட்டய படிப்பு முடித்தவர்கள் மையம் தொடங்கிட விண்ணப்பிக்கலாம்.இம்மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் விற்பனை செய்யப்படுவதோடு, வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி நோய், வேளாண்மைக்கு தேவையான ஆலோசனை வழங்கப்படும். இத்திட்டத்தில், 10 லட்சம் முதல், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மையங்கள் அமைத்திட, 30 சதவீத மானியமாக மூன்று லட்சம் முதல், 6 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன் பெற வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை வணிகம் பட்டப்படிப்பு அல்லது பட்டய படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் அரசு சார் நிறுவனத்தில் பணியில் இருத்தல் கூடாது.
வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெறப்பட்ட பின், திட்டத்தில் மானிய உதவி பெற AGRISNET இணையதளத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். உழவர் நல சேவை மையம் அமைப்பதற்கு, 300 சதுர அடியில் மையம் அமைத்து, வேளாண் இடுபொருள்கள் விற்பனை செய்பவர்கள் ரூ.10 லட்சம் வரையிலான முதலீட்டில் தொழில் தொடங்கலாம். இதற்கு ரூ. 3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. 600 சதுர அடியில் மையம் அமைத்தால் ரூ. 20 லட்சம் முதலீட்டுடன் ரூ. 6 லட்சம் வரை மானியம் பெற முடியும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

