/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மொபைல்போன் டவரில் ஒயர் திருடிய மூவர் கைது
/
மொபைல்போன் டவரில் ஒயர் திருடிய மூவர் கைது
ADDED : டிச 27, 2025 05:09 AM
குளித்தலை: மொபைல்போன் டவரில், 60 மீட்டர் ஒயர் திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை அடுத்த டி.இடையபட்டியை சேர்ந்தவர் ஏகாம்பரமூர்த்தி, 31. இவர், தனியார் மொபைல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில், டெக்னீஷியனாக இரண்டு ஆண்டுகளாக பணிபுரிகிறார். கரூர் பகுதியில் உள்ள மொபைல்போன் டவர், இவரது கண்காணிப்பில் இருந்து வருகிறது. கடந்த 24ம் தேதி காலை 11:00 மணியளவில், கடவூரில் உள்ள மொபைல் டவரில் மற்றொரு பொறுப்பாளர் சுரேஷ் என்பவரிடம், பராமரிப்பு பணி சம்பந்தமாக அந்த இடத்தை பார்வையிட ஏகாம்பரமூர்த்தி சென்றார்.அப்போது, மூன்று பேர் ஆர்.எப். எனப்படும், 60 மீட்டர் கேபிள் ஒயர்களை திருடினர். இதை பார்த்த இருவரும், மூன்று பேரை பிடித்து பாலவிடுதி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் தேனி மாவட்டம், தர்மாபுரியை சேர்ந்த ராமமூர்த்தி, 37, மதன், 30, திண்டுக்கல் மாவட்டம் ஏரியோடு ரஞ்சித்குமார், 38, என தெரிய வந்தது. மூன்று பேரையும் பாலவிடுதி போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

