/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேரணி
/
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேரணி
ADDED : டிச 27, 2025 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், ஆட்சி மொழி சட்ட வார விழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லுாரியில் இருந்து தொடங்கிய பேரணியை, மாவட்ட கலெக்டர் தங்கவேல், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிறகு, தான்தோன்றிமலையில் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, மீண்டும் அரசு கலைக் கல்லுாரியை அடைந்தது.நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஜோதி, கல்லுாரி முதல்வர் சுதா, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், கவிஞர் செல்வம் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஸ்ரீ ருத்ர
நடனாலயம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

