/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மறைந்த தி.மு.க., மூத்த நிர்வாகி இல்லத்தில் ஆறுதல் கூறிய முதல்வர்
/
மறைந்த தி.மு.க., மூத்த நிர்வாகி இல்லத்தில் ஆறுதல் கூறிய முதல்வர்
மறைந்த தி.மு.க., மூத்த நிர்வாகி இல்லத்தில் ஆறுதல் கூறிய முதல்வர்
மறைந்த தி.மு.க., மூத்த நிர்வாகி இல்லத்தில் ஆறுதல் கூறிய முதல்வர்
ADDED : செப் 18, 2025 02:15 AM
குளித்தலை, :பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கு அறிவிக்கப்பட்ட தி.மு.க.,வின் மூத்த முன்னோடி தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராமன், வயது முதிர்வின் காரணமாக கடந்த மாதம், 28ல் இயற்கை எய்தினார். இந்நிலையில் நேற்று மதியம், 12:30 மணியளவில் மறைந்த சிவராமன் இல்லத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் வந்தார்.பின்னர் சிவராமன் திருவுருவ படத்திற்கு மலர் துாதூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அமைச்சர்கள் நேரு, மகேஷ்,கரூர் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, எம்.பி.,க்கள் கனிமொழி, ராஜா, திருச்சி சிவா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக நேற்று காலை துணை முதல்வர் உதயநிதி, சிவராமன் திருவுருவப் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் உடனிருந்தார்.