/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.1,500 கோடியில் காலணி ஆலை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
/
ரூ.1,500 கோடியில் காலணி ஆலை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
ரூ.1,500 கோடியில் காலணி ஆலை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
ரூ.1,500 கோடியில் காலணி ஆலை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
ADDED : டிச 17, 2024 07:31 AM
சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய காலணி தொழிற்சாலை அமைக்க, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தைவான் நாட்டைச் சேர்ந்த 'ஹாங் ப்பு' குழுமம், 20க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களை கொண்டு இயங்குகிறது.
இக்குழும நிறுவனம், விளையாட்டு காலணிகளின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனையில்
ஈடுபட்டுள்ளது.உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய காலணி உற்பத்தியாளராக இந்நிறுவனம் திகழ்கிறது. நைக், கன்வர்ஸ், வேன்ஸ்,
பூமா, யு.ஜி.ஜி., அண்டர் ஆர்மர் போன்ற சர்வதேச அளவில் வணிக முத்திரை கொண்ட நிறுவனங்களுக்கு காலணி மேம்பாடு,
வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. ஹாங்ப்பு நிறுவனத்துக்கு, ராணிபேட்டை
மாவட்டம் பணப்பாக்கம் சிப்காட்டில் 200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசுடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் இந்நிறுவனம், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் அங்கு
காலணிகள் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இதன் வாயிலாக, 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.தலைமை செயலகத்தில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டினார்.அப்போது, ஹாங் ப்பு நிறுவனத்தின் தலைவர் டி.ஒய்.சாங்,இயக்குனர் ஜாக்கி சாங், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள்
காந்தி, ராஜா, தலைமை செயலர் முருகானந்தம், தொழில் துறை செயலர் அருண் ராய், தோல் ஏற்றுமதி கவுன்சில் செயல்
இயக்குனர் செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.