/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி;முன்பதிவு நாள் நீட்டிப்பு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி;முன்பதிவு நாள் நீட்டிப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி;முன்பதிவு நாள் நீட்டிப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி;முன்பதிவு நாள் நீட்டிப்பு
ADDED : ஆக 15, 2025 02:32 AM
கரூர், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கு, முன்பதிவு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்க வேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு https://cmtrophy.sdat.in, https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை, 10 லட்சம் போட்டியாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
முன்பதிவு நாளையுடன் முடிவடைகிறது. அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க இணையதள முன்பதிவு செய்திட கால அவகாசம் வரும், 20 இரவு, 8:00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலரை, 74017 03493 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.