/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வாகனம் இல்லை:சொந்த பணத்தை செலவு செய்யும் போலீசார்
/
குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வாகனம் இல்லை:சொந்த பணத்தை செலவு செய்யும் போலீசார்
குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வாகனம் இல்லை:சொந்த பணத்தை செலவு செய்யும் போலீசார்
குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வாகனம் இல்லை:சொந்த பணத்தை செலவு செய்யும் போலீசார்
ADDED : செப் 29, 2025 02:00 AM
ஈரோடு:ஈரோட்டில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, ஜீப் இல்லாததால், போலீசார் சொந்ப்பணத்தை செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில், ஈரோடு மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு செயல்படுகிறது. இங்கு, 10 போலீசார், எஸ்.ஐ., தலைமையில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பிரிவுக்கு தனியாக வாகன வசதி இல்லாததால், சொந்த செலவில் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி போலீசார் கூறியதாவது:குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு துவங்கி மூன்றாண்டுக்கு மேலாகியும், இதுவரை ஜீப் கொடுக்கவில்லை. காணாமல் போகும் குழந்தை, பெண்களை மீட்க, சொந்த செலவில் தான் வாடகை கார் அல்லது வேன் பிடித்து சென்று வர வேண்டியுள்ளது. இப்பிரிவை எஸ்.ஐ.,தான் கவனிக்கிறார். ஆனால் வழக்கு, மனு, புகார்கள் குறித்து ஏ.டி.எஸ்.பி.,யிடம் தெரிவிக்கும் சூழல் உள்ளது. இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., பணியிடம் உருவாக்கி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
'எளிதான செயல் அல்ல'
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சராசரியாக, 350 கி.மீ., வரை மாயமான குழந்தைகள், பெண்களை தேடி சென்னை, திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட பகுதிக்கு காரில் செல்கிறோம். மாயமானவர்களின் இருப்பிடத்தை உறுதி செய்த பின்னரே செல்கிறோம். குறிப்பாக காதல் விவகாரத்தில் மாயமாகும் நபர்களை பிடித்து கொண்டு வருவது எளிதான செயல் அல்ல.
சட்டரீதியாக பல்வேறு இடர்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதில்லாமல் பெருந்துறை சிப்காட்டில் காணாமல் போகும் வட மாநில பெண்களை கண்டுபிடிக்க ஜார்கண்ட், அசாம், சட்டீஸ்கர், பீகார், மேற்கு வங்கம் வரை ரயிலில் சென்றுள்ளோம் என்றும் இப்பிரிவு போலீசார் தெரிவிக்கின்றனர்.