தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/பூங்காவில் பாதுகாப்பின்றி விளையாடும் சிறு-வர்கள்

பூங்காவில் பாதுகாப்பின்றி விளையாடும் சிறு-வர்கள்

பூங்காவில் பாதுகாப்பின்றி விளையாடும் சிறு-வர்கள்


ADDED : ஜூன் 28, 2026 02:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 02:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி; அரவக்குறிச்சி அருகே உள்ள சோழன் நகர் சிறுவர் பூங்காவில், ஒரு பக்கம் ஒப்பந்ததாரரின் கம்பி கட்டும் வேலையும், மற்றொரு பக்கம் பாது-காப்பின்றி சிறுவர்கள் விளையாடியும் வருகின்-றனர்.

அரவக்குறிச்சி சோழன் நகர் பகுதியில், மக்-களின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து, சிறுவர்கள் விளையாடும் பூங்கா அமைக்கும் பணி கடந்தாண்டு துவங்கியது. இளைஞர்கள் விளை-யாட்டு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் நோக்கில் தொடங்கப்பட்ட பூங்கா, சட்டசபை தேர்தலால் பணிகளில் மந்தம் ஏற்பட்டது.பூங்கா பணிகள் முழுமையடையாத நிலையில், அப்பகுதியில் உள்ள குழந்தைகள் அங்கு சென்று விளையாடி வருகின்றனர். அதே வேளையில், ஒரு பக்கம் ஒப்பந்ததாரரின் கட்டுமான பணிக-ளுக்காக பயன்படுத்தப்படும் கற்கள், இரும்பு கம்-பிகள், சிமென்டு மூட்டை உள்ளிட்ட பொருட்கள் பூங்கா முழுவதும் ஆங்காங்கே சிதறி கிடக்கின்-றன. குழந்தைகள் விளையாடும் போது விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்-பாக, கட்டுமான வேலையில் ஈடுபடும் ஒப்பந்த-தாரர்கள், பணிகள் நடைபெறும் இடங்களில் எச்-சரிக்கை பலகையை வைக்க வேண்டும்.

பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடனடியாக கவனம் செலுத்தி, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து, பூங்காவை முழுமையாக பாதுகாப்புடன் பொதுமக்கள் பயன்-பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us