/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குழந்தைகள் தினவிழா
/
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குழந்தைகள் தினவிழா
ADDED : நவ 15, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:குழந்தைகள் தின விழா, வந்தே மாதரம், 150 வது ஆண்டு விழா, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா, கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று
கொண்டாடப்பட்டது.
அதில், பள்ளி மாணவ, மாணவியர் வந்தே மாதரம் பாடலை பாடினர். அதை தொடர்ந்து, தான்தோன்றிமலை வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பணிகள் குறித்து பேசினார்.விழாவில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளமதி, துணைத்தலைவர் பூங்கோதை, பள்ளி தலைமையாசிரியர் பரணி-தரன், ஆசிரியர்கள் தெரசா ராணி, சுமதி, நந்தினி பிரியா, பிரேம-லதா உள்பட பலர்
பங்கேற்றனர்.

