/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ரயில்வே காலனியில் சிறுவர் பூங்கா சேதம்
/
கரூர் ரயில்வே காலனியில் சிறுவர் பூங்கா சேதம்
ADDED : அக் 24, 2025 01:25 AM
கரூர் கரூர் ரயில்வே காலனியில் பூங்கா சேதமடைந்துள்ளது.
கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள ரயில்வே குடியிருப்பில், ஏராளமானோர் வசிக்கின்றனர். ரயில்வே காலனி வளாகத்தில், பொது மக்கள் பயன்பாட்டுக்காக, பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது.
அதில் சிறுவர், சிறுமியர் விளையாட வசதியாக, விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி செய்ய தனியாக சாதனங்கள் இருந்தன.
இந்நிலையில், பூங்காவில் தற்போது விளையாட்டு உபகரணங்கள் உடைந்த நிலையில் உள்ளது. அதை, சிறுவர்களால் பயன்படுத்த முடியவில்லை. அந்த பகுதியில், வேறு பொழுது போக்குக்கான இடம் இல்லாததால், பூங்காவில் பழுதான உபகரணங்களை, உடனடியாக சரி செய்ய, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

