/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்திற்கு இடையூறாக போதையில் குடிமகன்கள் சாலையில் படுத்து அட்டகாசம்

ADDED : அக் 24, 2025 01:26 AM
பள்ளிப்பாளையம் :பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போதையில் குடிமகன்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் படுத்து, அட்டகாசம் செய்வது தொடர்கிறது.பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, ஒட்டமெத்தை செல்லும் பிரதான சாலையில் கடந்த வாரம் தனியார் மதுபான கடை திறக்கப்பட்டது. இங்கு மது அருந்த தினமும் ஏராளமானோர் வருகின்றனர். போதை ஏறியவுடன் சிலர், பிரதான சாலையில் படுத்தபடி அட்டகாசம் செய்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் பயந்தபடி செல்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, போதையில் வாலிபர் ஒருவர் சாலையின் குறுக்கே படுத்து கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறு செய்து அட்டகாசம் செய்துள்ளார். அருகில் இருந்தவர்கள், போதை வாலிபரை ஏழுப்பி, ஓரமாக விட்டனர். மற்றொரு வாலிபர் பஸ் ஸ்டாண்ட் பிரிவு சாலையில் படுத்து அட்டகாசம் செய்துள்ளார். குடிமகன்களால் தினமும் ஏதாவது பிரச்னை வருகிறது.