/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருகாடுதுறை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
/
திருகாடுதுறை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
திருகாடுதுறை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
திருகாடுதுறை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
ADDED : மே 08, 2025 01:45 AM
கரூர், திருகாடுதுறை மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா நேற்று நடந்தது.
கரூர் மாவட்டம், திருகாடுதுறை மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 27ல் பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த, 5 வரை பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா, மூலவர் அம்மனுக்கு வடிசோறு நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் இரவு காவிரியாற்றில், பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக சென்று, மாரியம்மன் கோவில் முன், அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். அதையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
பிறகு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.