/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில்கிறிஸ்துமஸ் கீத பவனி
/
அரவக்குறிச்சியில்கிறிஸ்துமஸ் கீத பவனி
ADDED : டிச 19, 2024 01:06 AM
அரவக்குறிச்சி, டிச.19-
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கிறிஸ்தவர்கள் பாடல்கள் பாடி, நடனமாடி கொண்டாடி வருகின்றனர்.
தென்னிந்திய திருச்சபையின் ஒரு அங்கமான, அரவக்குறிச்சி துாய தோமா ஆலயத்தில், கடந்த ஒரு வாரமாக கீதபவனி நிகழ்ச்சி நடந்து வருகிறது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று, பாடல்கள் பாடி உற்சாகப்படுத்தி வருகின்றனர். மேலும் அருகில் உள்ள, ஏழை எளிய மக்களுக்கு உதவி புரியுமாறு தென்னிந்திய திருச்சபையின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல், அரவக்குறிச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்படும், புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் வீட்டில் கீத பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்வித்தனர்.