ADDED : டிச 26, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூரில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா, நேற்று அதி--காலை கோலாகலத்துடன் நடந்தது.
ஏசு கிறிஸ்து பிறந்த நாளை, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்த-வர்கள், கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
நேற்று அதிகாலை, கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கரூர் வடக்கு பிரதட்சிணம் சாலையில் உள்ள புனித குழந்தை
தெரசா ஆலயத்தில் பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இசைக்கருவிகளை இசைத்தும், பாடல்-களை பாடியும் வழிபட்டனர்.
பின்னர் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொண்டனர். அதே போல், கரூர் (சி.எஸ்.ஐ.,) நகர ஹென்றி லிட்டில் நினைவாலயத்தில், நேற்று
காலை சிறப்பு திருப்பலி நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

