/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு வினா, விடை புத்தகம் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு வினா, விடை புத்தகம் வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு வினா, விடை புத்தகம் வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு வினா, விடை புத்தகம் வழங்கல்
ADDED : டிச 26, 2025 05:21 AM

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிய-ருக்கு செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில், பொதுத்தேர்வுக்-கான வினா, விடை புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அரவக்குறிச்சி தி.மு.க., எம்.எல்.ஏ., இளங்கோவன் புத்தகங்-களை வழங்கினார். அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈச-நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டிப்பட்டிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பபட்டி, கோவிலுார், சவுந்தராபுரம், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி, உஸ்துவாலா ஓரியண்டல் அரபிக் பள்ளி, அரவக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வை முன்னிட்டு, வினா, விடை புத்தகங்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் தி.மு.க., நகர செயலாளர் மணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஆசிரி-யர்கள் கலந்து கொண்டனர்.

