/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் 39வது ஆண்டு விழா தொடக்கம்
/
பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் 39வது ஆண்டு விழா தொடக்கம்
பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் 39வது ஆண்டு விழா தொடக்கம்
பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் 39வது ஆண்டு விழா தொடக்கம்
ADDED : டிச 26, 2025 05:21 AM

கரூர்: கரூரில், பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தின், 39வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
தொடர்ந்து, அஸ்த்திர ஹோமம், வாராஹி ஹோமம், பூர்ணா-ஹூதி ஆகியவை நடந்தன. பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்-கப்பட்டது. மாலையில் பஞ்சவாத்தியம், மேளதாளம் மற்றும் கிராமிய நிகழ்ச்சியுடன், பசுபதி ஐயப்ப சுவாமி புறப்பாடு
நடந்தது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இன்று காலை 6:00 மணிக்கு அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தக்-குடம் புறப்பாடு நடக்கிறது. 9:00 மணிக்கு ஐயப்பனுக்கு அபி-ஷேகம் செய்யப்படுகிறது.
மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 1:00 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனையை தொடர்ந்து, தசாம்ச ஹோமம், பிர-சாதம் வழங்கப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடக்கவுள்ளது. இரவு, 8:00 மணிக்கு கவிதா ஜவகர் குழுவினரின் பட்டிமன்றம் நடக்கிறது. நாளை, நாளை மறுநாள் (27, 28ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள், சீதா கல்யாண
உற்வசம் நடக்கிறது.