தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/இன்று 2ம் பருவ பாட புத்தகம் வழங்க ஏற்பாடு

இன்று 2ம் பருவ பாட புத்தகம் வழங்க ஏற்பாடு

இன்று 2ம் பருவ பாட புத்தகம் வழங்க ஏற்பாடு


ADDED : அக் 05, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2026 05:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மாவட்டத்தில், 877 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இன்று காலாண்டு தேர்வு முடிந்து, பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், இரண்டாம் பருவ கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகள் மாணவ, மாணவியருக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் பருவத்திற்கு தேவையான சீருடைகள் மற்றும் புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இதையொட்டி, 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் சென்னையில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அதன்படி, கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு தேவையான, 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தடைந்தன. கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பாடப்புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வேன்கள் மூலம் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இன்று பள்ளி திறக்கும் போது, மாணவர்கள் கையில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us