/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புங்காற்று நெடுகையில் துாய்மை பணி மும்முரம்
/
புங்காற்று நெடுகையில் துாய்மை பணி மும்முரம்
ADDED : அக் 19, 2025 02:30 AM
கிருஷ்ணராயபுரம்: வயலுார் புங்காற்று நெடுகை பகுதியில், வளர்ந்த செடி, கொடி-களை அகற்றி துாய்மை பணியில், 100 நாள் திட்ட தொழிலா-ளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்து வழியாக, பஞ்-சப்பட்டி பகுதியில் இருந்து புங்காற்று நெடுகை கேட்டமேடு வரை செல்கிறது. இந்த நெடுகை வழியாக, மழை காலங்களில் பஞ்சப்பட்டி குளத்தில் நீர நிரம்பி, பிலாறு வடிகால் வாய்க்காலில் கலக்கிறது. தற்போது வயலுார் புங்காற்று நெடுகை பகுதிகளில், அதிகமான முள் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் மழைநீர் முழுமையாக புங்காற்று நெடுகைகளில், சேமிக்க முடியாத நிலை உள்ளது.இந்நிலையில், நெடுகை பகுதிகளில் வளர்ந்த முள் செடிகளை வெட்டி அகற்றும் பணி பஞ்சாயத்தில் உள்ள, 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு நடந்து வருகிறது.