/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் தேங்காய் விலை உயர்வு
/
கிருஷ்ணராயபுரத்தில் தேங்காய் விலை உயர்வு
ADDED : மே 10, 2025 12:58 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில், தேங்காய் விலை உயர்ந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்காம்புலியூர், மாயனுார், மணவாசி, கட்டளை, மகாதானபுரம், சிந்தலவாடி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, கொம்பாடிப்பட்டி, வல்லம், வீரவள்ளி, புதுப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் பரவலாக தென்னை மரம் தோப்பு வைத்துள்ளனர். பறிக்கப்படும் தேங்காய்கள் கரூர், திருச்சி, பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர், பழனி ஆகிய மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக, தென்னை மர தோப்புகளில் போதிய அளவில் காய்கள் இல்லாததால் தேங்காய் வரத்து சரிந்தது. இதனால், கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்து வருகிறது.
தற்போது ஒரு தேங்காய், 15 ரூபாயில் இருந்து, 30 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து சில்லரை வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த சில மாதங்களாகவே, தேங்காய் வரத்து சரிந்து வருகிறது. இதனால் விலை குறையாமல் உயர்ந்து வருகிறது. வரும் வாரங்களில் மேலும் தேங்காய் விலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது,' என்றனர்.