/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலைபுதுாரில் ரூ.49.41 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு, தேங்காய் ஏலம்
/
சாலைபுதுாரில் ரூ.49.41 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு, தேங்காய் ஏலம்
சாலைபுதுாரில் ரூ.49.41 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு, தேங்காய் ஏலம்
சாலைபுதுாரில் ரூ.49.41 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு, தேங்காய் ஏலம்
ADDED : அக் 02, 2024 01:56 AM
சாலைபுதுாரில் ரூ.49.41 லட்சத்துக்கு
தேங்காய் பருப்பு, தேங்காய் ஏலம்
கரூர், அக். 2-
சாலைபுதுார் ஒழுங்கு
முறை விற்பனை கூடத்தில், ரூ.49.41 லட்சத்துக்கு தேங்காய், தேங்காய் பருப்பு விற்பனை நடந்தது.
கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேங்காய் சாகுபடி நடக்கிறது. இங்கு தேங்காய்களை உடைத்து, காய வைத்து தங்களது தேவைக்கு எண் ணெய் எடுத்தது போக மீதமுள்ள பருப்பு, தேங்காய்களை, நொய்யல் அருகில் உள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் நடக்கும் ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், 7,781 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 35.69 ரூபாய், அதிகபட்சமாக, 43.65 ரூபாய், சராசரியாக, 40.19 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,089 கிலோ எடையுள்ள தேங்காய், ஒரு லட்சத்து, 17 ஆயிரத்து, 154 ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய், 868 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 119.01 ரூபாய், அதிகபட்சமாக, 130.99 ரூபாய், சராசரியாக, 122.49 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 91.68 ரூபாய், அதிகபட்சமாக, 121.69 ரூபாய், சராசரியாக, 114.39 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 42 ஆயிரத்து, 200 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 48 லட்சத்து, 23 ஆயிரத்து, 874 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 49 லட்சத்து, 41 ஆயிரத்து, 28 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.