தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனத்தால் நிலத்தடி நீர் பாதிப்பு

தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனத்தால் நிலத்தடி நீர் பாதிப்பு

தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனத்தால் நிலத்தடி நீர் பாதிப்பு


ADDED : அக் 30, 2026 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 07:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:க.பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட தும்பிவாடி பகுதியில், தேங்காய் ஓடுகளை எரித்து ரசாயன தேவைக்கு பயன்படுத்தும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திலிருந்து வெளியேறும் புகை மற்றும் கழிவுநீரால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர் மாசடைவதாக குற்றம் சாட்டி, அப்பகுதி மக்கள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்பிவாடி பகுதியில், தேங்காய் ஓடுகளை எரித்து ரசாயன தேவைக்காக பயன்படுத்தி வரும் நிலையில், அவற்றை எரிப்பதால் வெளியேறும் புகை மற்றும் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கழிவு

நீர் நிலத்திற்குள் விடப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைவதுடன், கிணறுகளின் நீரின் தரமும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக ஏற்கனவே கரூர் மாவட்ட கலெக்டர், மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது வரை அந்நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தின் செயல்பாடுகளால் நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் நேற்று, நிறுவனத்தை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். சின்னதாராபுரம் போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us