ADDED : அக் 30, 2026 07:07 AM
கரூர்,:கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள அரசப்ப கவுண்டனுாரை சேர்ந்தவர் கவுசல்யா, 34. இவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் நொய்யல் அருகே, புங்கோடை குளத்துப்பாளையத்தில் உள்ள, சித்தப்பா வீட்டில் தங்கி, புன்னம்சத்திரம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில், அருகிலுள்ள கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற மாணவி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும், தோழிகளின் வீடுகளிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் மாணவி குறித்து தகவல் கிடைக்கவில்லை.
இதையடுத்து, மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி, வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தாய் கவுசல்யா புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
