ADDED : ஆக 07, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
கரூர்:வேலாயுதம்பாளையம்
அருகே மூலிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார், 45. இவரது
தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளில் திடீரென தீப்பிடித்து எரிய
ஆரம்பித்தது.
அதனை ஒட்டி இருந்த தென்னை மரங்களிலும் தீப்பற்றி
எரிய ஆரம்பித்தது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி
செய்தனர். இருப்பினும் காற்று வேகமாக வீசியதால் மரங்கள் மேலும்
எரிந்தன. பின்னர், புகழூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அலுவலர் சரவணன்
தலைமையில், சம்பவ இடத்துக்கு சென்று செடி, கொடி மற்றும் தென்னை
மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை, நீண்ட நேரம் போராடி தீ அணைத்தனர்.
இதனால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம்
தெரியவில்லை.
