ADDED : ஆக 07, 2026 05:48 AM

கரூர்:கரூர்
அருகே, பாசன வாய்க்கால் கழிவுநீர் வாய்க்காலாக மாறியுள்ளது. அதில்,
கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர்
மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில், அமராவதி ஆற்றின் பாசன
கிளை வாய்க்கால் தொடங்கி, லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் மீண்டும்
அமராவதி ஆற்றில் கலக்கிறது.
தற்போது, ஆண்டாங்கோவில் முதல்
லைட் ஹவுஸ் கார்னர் வரை, பாசன வாய்க்காலின் கரைப்பகுதிகளில்,
ஏராளமான குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதனால், மழை இல்லாத
காலங்களில், பாசன வாய்க்கால் கழிவுநீர் வாய்க்காலாக மாறி விடுகிறது.
அதில் கழிவுநீர், பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கியுள்ளன. மேலும்,
வாய்க்காலில் மரம், செடி கொடிகள் அதிகளவில் முளைத்து, கடந்த சில
நாட்களாக கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இரவு நேரம்
மட்டுமின்றி, பகல் நேரத்திலும் அனைவரும் கொசுக்கடியால்
அவதிப்படுகின்றனர்.
எனவே, ஆண்டாங்கோவில் முதல் லைட்ஹவுஸ்
கார்னர் வரை, பாசன வாய்க்காலை துார் வாரி கொசு மருந்து அடிக்க,
சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
