/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி ரயில்: புதிய பெட்டிகளுடன் இயக்கம்
/
கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி ரயில்: புதிய பெட்டிகளுடன் இயக்கம்
கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி ரயில்: புதிய பெட்டிகளுடன் இயக்கம்
கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி ரயில்: புதிய பெட்டிகளுடன் இயக்கம்
ADDED : டிச 29, 2024 01:05 AM
கரூர், டிச. 29-
கோவையில் இருந்து கரூர் வழியாக, மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முதல் புதிய பெட்டிகளுடன் இயங்கியது.
கடந்த, 2003ம் ஆண்டு ஜன., 20 முதல் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு, ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நாள்தோறும் காலை, 7:15 மணிக்கு கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு, 9:30 மணிக்கு கரூர் வந்து சேரும். அதே போல், நாள்தோறும் மதியம், 3:10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு, மாலை, 6:40 மணிக்கு கரூர் வரும்.
ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், 18 முதல், 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். முன்பதிவு செய்தால் மட்டும், இந்த ரயிலில் பயணம் செய்ய முடியும். கடந்த, 21 ஆண்டுகளில் இரண்டு கோடிக்கும் அதிகமான பேர், ஜன்சதாப்தி ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த, 21 ஆண்டுகளுக்கு பிறகு கோவை-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ரயிலில், பெட்டிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதிக விசாலாமான இடம் கொண்ட எல்.எச்.பி., பெட்டிகளில், லிங்க் ஹாபேமேன் புஷ் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முதல், புதிய பெட்டிகளுடன் இயக்கப்பட்ட ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை, 9:30 மணிக்கு கரூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. அப்போது, ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் கைதட்டி வரவேற்றனர்.