/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் 425 மி.மீ., மழை குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
/
கரூர் மாவட்டத்தில் 425 மி.மீ., மழை குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
கரூர் மாவட்டத்தில் 425 மி.மீ., மழை குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
கரூர் மாவட்டத்தில் 425 மி.மீ., மழை குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
ADDED : நவ 22, 2025 01:55 AM
கரூர், ''கரூர் மாவட்டத்தில் நடப்பாண்டு, 425.65 மி.மீ., மழை பெய்துள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட விவசாயி கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட, பல்வேறு கேள்வி
களுக்கு அரசு துறை அதிகாரி கள் பதில் அளித்தனர்.
பிறகு, கலெக்டர் தங்க வேல் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில், 3,752 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
நெல் பயிர் சாகுபடிக்காக, 31 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சிறுதானிய விதைகள், 54.500 மெட்ரிக் டன், பயறு வகைகள், 36 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துக்கள், 3,500 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.
கரூர் மாவட்டத்தில், இயல்பான ஆண்டு மழையளவு, 652.20 மி.மீ., நடப்பு நவம்பர் வரை, 425.25 மி.மீ., மழை பெய்துள்ளது. நவம்பர் மாத இயல்பான அளவை விட, 176.05 மி.மீ., மழை குறைவாக பெய்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., விமல்ராஜ், வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அபிராமி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்
(விவசாயம்) உமா உள்பட, அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

