/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
3,105 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
/
3,105 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
3,105 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
3,105 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
ADDED : செப் 27, 2025 01:14 AM
கரூர், ''சாகுபடிக்கு, 3,105 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் யூரியா, 567 மெட்ரிக் டன், டி.ஏ.பி., 770 மெட்ரிக் டன், பொட்டாஷ், 642 மெட்ரிக் டன், என்.பி.கே. 1,124 மெட்ரிக் டன் என மொத்தம், 3,105 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண் துறை மூலம் நெற்பயிர் சாகுபடிக்கு, நெல் விதைகள், 142.650 மெட்ரிக் டன், சிறுதானியங்கள், கம்பு, சோளம் விதை, 52 டன், பயறு வகை பயிர்கள் உளுந்து, கொள்ளு, தட்டைப்பயறு ஆகிய விதைகள் 50 டன், எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை ஆகிய விதை, 3.10 டன் இருப்பில் உள்ளது.
மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652.20 மி.மீட்டர். நடப்பு ஆண்டு செப்டம்பர் -2025 வரை, 276.60 மி.மீ., மழை பெய்துள்ளது. 88.06 மி.மீ., குறைவாக மழை பெய்துள்ளது. காரீப் பருவத்தில் சராசரியாக நெல், 1,271 ஹெக்டேர், சிறு தானியங்கள், 3,798 ஹெக்டேர், பயறு வகை பயிர்கள், 2,194 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள், 4,025 ஹெக்டேர், பருத்தி, 107 ஹெக்டேர், கரும்பு, 1,030 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அபிராமி, இணை இயக்குனர் (வேளாண்) சிங்காரம் உள்பட பலர் பங்கேற்றனர்.