/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எழுத்தாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
/
எழுத்தாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
எழுத்தாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
எழுத்தாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
ADDED : நவ 03, 2025 03:22 AM
கரூர்: 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், எழுத்தாளர் உதவித்-தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் எழுத்தாளர்களின், இலக்கிய படைப்புகளில், 11 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த, 9 எழுத்தாளர்கள் மற்றும் இந்த சமூக பிரச்னை எழுதும் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள், தலா, ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற விண்ணப்பிக்-கலாம். எழுத்தாளர்களுக்கு வயது வரம்பு இல்லை.
கதை, கட்டுரை, கவிதை, வரலாறு மற்றும் புதினம் ஆகியவை எதுவாகவும் இருக்கலாம். இருப்பினும் தமிழ்மொழியிலேயே படைப்பு இருக்க வேண்டும். பிற மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் மொழி படைப்பாகவும் இருக்-கலாம். படைப்புகள் 90 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஏற்கனவே சந்தையில் வெளியிடப்பட்டுள்ள படைப்புகளை கொண்டு விண்ணப்பித்தல் கூடாது. https://www.tn.gov.in/form_view.php?dep_id=MQ என்ற இணையத-ளத்தளத்தில் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து கொள்-ளலாம். வரும், 17க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

