/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழையில் செல்வதை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்
/
மழையில் செல்வதை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்
ADDED : மே 21, 2024 11:17 AM
கரூர்: கோடை மழை பெய்யும்போது, இடி மின்னல் தாக்கும் அபாய் இருப்பதால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. கோடை மழையின்போது இடி மின்னல் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் நீர் தேங்கியுள்ள சாலைகள், நீர்நிலைகள் ஆகியவற்றில் செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளையும் இடி மின்னலில் இருந்து பாதுகாக்க ஏதுவாக, பாதுகாப்பான இடங்களில் வைத்திருக்க வேண்டும்.
கோடை மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பொதுமக்கள் உடனுக்குடன் கரூர் கலெக்டர் அலுவலக அவசர கால கட்டுப்பாட்டு அறையில், 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04324-256306 ஆகியவற்றில் தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு, கூறியுள்ளார்.

