/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் தாலுகா பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
/
புகழூர் தாலுகா பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
ADDED : பிப் 23, 2024 02:33 AM
கரூர்;கரூர் மாவட்டம் புகழூர் தாலுகா உள்பட்ட பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கலெக்டர் தங்கவேல், பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தார். ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மருந்துகள் இருப்பு, சித்த மருத்துவ பிரிவு, மகப்பேறு பிரிவு, அவசர பிரிவு ஆகிய சிகிச்சை பிரிவுகளை ஆய்வு மேற்கொண்டார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகில் நமக்கு நாமே திட்டத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு கட்டிட பணிகளை பார்வையிட்டார்.
கோம்புபாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் உள்ள பதிவேடுகள். பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுக்க அறிவுறுத்தினார். வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனை ஆய்வு செய்தார்.டி.ஆர்.ஓ., கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கம் கந்தராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.