ADDED : மே 07, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரிக்கு, (தன்னாட்சி) புதிய முதல்வராக ராதாகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றார். 1996ம் ஆண்டு கல்லுாரி பணியில் சேர்ந்தவர்.
கரூர் தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில், 2009 முதல் விலங்கியல் துறையில் பணியாற்றி உள்ளார். 2020ல் கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் துவங்கப்பட்ட அரசு கலை கல்லுாரியின் பொறுப்பு முதல்வராக இருந்தார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் அரசு கல்லுாரி முதல்வராக பணியாற்றி, பதவி உயர்வின் அடிப்படையில், இங்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். பதவியேற்ற ராதாகிருஷ்ணனுக்கு, அனைத்து பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.