ADDED : ஜூன் 21, 2025 01:06 AM
கரூர், வெங்கமேடு, தான்தோன்றிமலையில் இரண்டு கல்லுாரி மாணவியரை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகள் ஜானு, 19; இவர், கரூர் அருகே பஞ்சமாதேவியில் உறவினர் பிரியா, 40, என்பவர் வீட்டில் தங்கியிருந்து, சங்ககிரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பயோ மெட்ரிக், இரண்டாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 19ல் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்ற ஜானு, திரும்பி வரவில்லை. இதுகுறித்து, உறவினர் பிரியா போலீசில் புகார் கொடுத்தார்.
வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
* திண்டுக்கல் மாவட்டம், லந்தன்கோட்டை பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவரது மகள் சந்தோஷினி, 20; இவர், கரூர் அருகே கோடங்கிப்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில், விடுதியில் தங்கி, பி.எஸ்.சி., வேதியியல் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 19ல் கல்லுாரி விடுதியில் இருந்து சென்ற சந்தோஷினி, திரும்பி வரவில்லை. பெற்றோர் வீட்டுக்கும், சந்தோஷினி செல்லவில்லை. இதுகுறித்து தாய் மாரியம்மாள், 43; போலீசில் புகார் கொடுத்தார்.
தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

