நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை :குளித்தலை அடுத்த, மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் வடிவேல், 43, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் கிருஷ்ணா காந்தி, 19, கரூர் தனியார் கல்லுாரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 12 காலை, 9:15 மணியளவில் வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, லாலப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.