/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டளை, -மாயனுார் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
கட்டளை, -மாயனுார் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : நவ 04, 2024 05:07 AM
கரூர்: கட்டளை, -மாயனுார் சாலை பல ஆண்டாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், கட்டளை- - மாயனுார் சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டு-புத்துார் உள்ளிட்ட இடங்களுக்கு லாரி உள்பட பல்வேறு வாக--னங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பள்ளிகள் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன. காவிரியாற்றில் உள்ள நீர்த்தேக்க கிணறுக-ளுக்கும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்-கின்-றன. இந்நிலையில், கட்டளை முதல் மாயனுார் வரை ரங்கநாத-புரம், மேலமாயனுார் உள்ளிட்ட பல்-வேறு பகுதிகளில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அச்சத்தில் சென்று வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடை-கின்றனர். எனவே, கட்டளை முதல் மாயனுார் வரை, குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை, உட-னடியாக, சீர-மைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.