/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சி.பி.ஐ., விசாரணை கேட்டு வழக்கு தொடர்ந்த வாலிபருக்கு மிரட்டல் தான்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மீது புகார்

ADDED : அக் 14, 2025 01:52 AM
கரூர், கரூரில், த.வெ.க., கூட்ட விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வாலிபரை, தி.மு.க., ஒன்றிய செயலர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரது மகள் கோகிலா ஸ்ரீ, 27. இவர் கடந்த செப்., 27ல், கரூர் வேலுச் சாமிபுரத்தில் நடந்த, த.வெ.க., கூட்டத்தில் சிக்கி, மூச்சுத்திணறி உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கை, சென்னை
உயர்நீதிமன்ற உத்தரவுபடி, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான, சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
ஆனால், இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, கோகிலா ஸ்ரீயின் சகோதரர் பிரபாகரன், 32, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில், கரூர் த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் வழக்கை, நேற்று சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
'சி.பி.ஐ., விசாரணை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், தான்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய, தி.மு.க., செயலர் ரகுநாதன், 20 லட்ச ரூபாய் மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பேரம் பேசினார். அதற்கு நான் (பிரபாகரன்) மறுத்ததால், ரகுநாதன் மிரட்டினார். நானும், என் தாய் மட்டும் வீட்டில் இருக்கிறோம். எனவே, குடும்பத்துக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, பிரபாகரன் பேசிய வீடியோ நேற்று முன்தினம் இரவு வெளியானது.
இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
இது தொடர்பாக, தான்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய, தி.மு.க., செயலர் ரகுநாதனை, மொபைல் போன் மூலம் விளக்கம் கேட்க முயற்சித்த போது, அவர் அழைப்பை
ஏற்கவில்லை.