/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காங்.,வேட்பாளர் ஜோதிமணி ஓட்டு கேட்க வந்தால் கேள்வி கேட்கணும்: மாஜி அமைச்சர்
/
காங்.,வேட்பாளர் ஜோதிமணி ஓட்டு கேட்க வந்தால் கேள்வி கேட்கணும்: மாஜி அமைச்சர்
காங்.,வேட்பாளர் ஜோதிமணி ஓட்டு கேட்க வந்தால் கேள்வி கேட்கணும்: மாஜி அமைச்சர்
காங்.,வேட்பாளர் ஜோதிமணி ஓட்டு கேட்க வந்தால் கேள்வி கேட்கணும்: மாஜி அமைச்சர்
ADDED : ஏப் 05, 2024 04:40 AM
கரூர்: ''காங்., வேட்பாளர் ஜோதிமணி ஓட்டு கேட்க வரும் போது, ஐந்தாண்டுகளாக எங்கே சென்றீர்கள் என, கேள்வி கேட்க வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
கரூர் அருகே, ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்., பெரியார் நகரில் நடந்த, பிரசார கூட்டத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:
கடந்த, 2011-2021ல், 10 ஆண்டு கால ஆட்சியில் ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்.,க்குதான் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை, அம்மா பூங்கா, துணை சுகாதார நிலையம், தார் சாலை, குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டது. மேலும் நான் கடந்த, 2016ல் போக்குவரத்து துறைக்கு அமைச்சரான பிறகு, ஆண்டாங்கோவில் வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில், கொலுசை பார்த்ததும், ஓட்டை மாற்றி போட்டு, என்னை தோற்கடித்து விட்டீர்கள்.
நான் என்ன தவறு செய்தேன். வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்யவில்லை. அடுத்தவர் நிலத்தை அபகரிக்கவில்லை. தவறு செய்பவனாக இருந்திருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் பதவியை தர மாட்டார். பொய்களை சொல்லி, உங்களை ஏமாற்றி விட்டு, வெற்றி பெற்றவர் தற்போது, புழல் சிறையில் உள்ளார். நன்றி சொல்ல கூட வரவில்லை.
அதேபோல் கடந்த, 2019ல் வெற்றி பெற்று எம்.பி.,யான ஜோதிமணி, ஐந்தாண்டுகள் தொகுதி பக்கம் வரவில்லை. தேர்தல் வந்ததும், வேட்பாளராக மீண்டும் வருகிறார். ஜோதிமணி ஓட்டு கேட்க வரும் போது, ஐந்தாண்டுகள் எங்கே சென்றீர்கள் என, பொதுமக்கள் கேள்வி கேட்ட வேண்டும். மீண்டும் ஜோதிமணி வெற்றி பெற்றால், டெல்லிக்கு போய் விடுவார்.
மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு, ஜோதிமணியை பார்க்க முடியாது. அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல், 35 ஆண்டுகளுக்கும் மேலாக கரூரில் ஜவுளி தொழில் செய்து வருபவர். அவர் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தருகிறவர். அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலை வெற்றி பெற வைத்தால், லோக்சபா கூட்டம் நடக்கும் நாட்களை தவிர, மற்ற நாட்களில் கரூரில்தான் இருப்பார். அப்போது அவரது வீட்டிலோ, அ.தி.மு.க., அலுவலகத்திலோ சந்திக்கலாம். கடந்த, 10 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சி திட்டங்களை, தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது.
அந்த திட்டங்கள் வரும், 2026ல் அ.தி.மு. க., ஆட்சிக்கு வரும் போது மீண்டும் செயல்படுத்தப்படும். இந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை வெற்றி பெற வைத்து, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல், மாவட்ட அவைத் தலைவர் திருவிகா, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

