/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்., போராடியது; எம்.பி.,ஜோதிமணி
/
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்., போராடியது; எம்.பி.,ஜோதிமணி
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்., போராடியது; எம்.பி.,ஜோதிமணி
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்., போராடியது; எம்.பி.,ஜோதிமணி
ADDED : மே 02, 2025 01:53 AM
கரூர்:
''ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடியது,'' என, கரூர் எம்.பி.,ஜோதிமணி கூறினார்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி, அப்பிபாளையம் பஞ்., தேத்தம்பட்டியில், மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், கரூர் எம்.பி.,ஜோதிமணி கலந்து கொண்ட பின், நிருபர்களிடம் கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடியது. தற்போது, மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒத்துக்கொண்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினும், மைக்ரோ மைனாரிட்டி மக்களுக்கும் குறிப்பிட்ட இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளார். 100 நாள் வேலை திட்டத்தை, பா.ஜ., அரசு படிப்படியாக குறைத்து, அதை நிறுத்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஆட்சியில், 100 நாள் வேலை திட்டம் அல்ல, அது 25 நாள் வேலை திட்டம்தான். அதற்கும் ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்காத சூழல் உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.