/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் மா.கம்யூ., கட்சி சார்பில் மாநாட்டு நிதி வசூல் தொடக்கம்
/
கரூரில் மா.கம்யூ., கட்சி சார்பில் மாநாட்டு நிதி வசூல் தொடக்கம்
கரூரில் மா.கம்யூ., கட்சி சார்பில் மாநாட்டு நிதி வசூல் தொடக்கம்
கரூரில் மா.கம்யூ., கட்சி சார்பில் மாநாட்டு நிதி வசூல் தொடக்கம்
ADDED : பிப் 06, 2025 05:42 AM
கரூர்: கரூரில், அகில இந்திய மா.கம்யூ., கட்சி மாநாட்டுக்காக, அக்கட்சி நிர்வாகிகள் நிதி வசூலில் ஈடுபட்டனர்.
அகில இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின், 24வது அகில இந்திய மாநாடு வரும் ஏப்., 2 முதல், 6 வரை மதுரையில் நடக்கிறது. அதில், நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். மேலும், மாநாட்டின் நிறைவு நாளான ஏப்., 6ல், 10 ஆயிரம் செந்தொண்டர்களின் அணிவகுப்பு, 10 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டமும் நடக்கிறது.
அதற்காக நாடு முழுவதும், மா.கம்யூ., கட்சி சார்பில், மாநாட்டு நிதி வசூல் செய்யும் பணி நேற்று தொடங்கியது. கரூர் மனோகரா கார்னரில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம், மாவட்ட செயலர் ஜோதிபாசு தலைமையில், மாநாட்டு வசூல் பணி தொடங்கியது. அப்போது, மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ேஹாசிமின், நகர செயலர் தண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.