/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ஜ., அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
/
பா.ஜ., அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 31, 2026 06:18 AM
கரூர்: கரூர் அருகே நடந்த, மத்திய அரசை கண்டித்து, காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை, மத்திய பா.ஜ., அரசு சமீ-பத்தில் விக்சித் பாரத்-ஜி ராம் ஜி என பெயரை மாற்றியது. அதை கண்டித்து, நாடு முழுவதும், காங்., கட்சி சார்பில் ஆ ர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டி-ருந்தது.
தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில், காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் அருகே வெண்ணைமலையில் உள்ள பஞ்., யூனியன் அலுவலகம் முன், மத்திய பா.ஜ., அரசை கண்டித்து நேற்று காலை, காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் சமீபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட, கரூர் மாவட்ட காங்., கட்சி தலைவர் ரமேஷ் உள்பட, 13 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

