/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோடங்கிபட்டி உயர்மட்ட பாலம் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி விறுவிறு
/
கோடங்கிபட்டி உயர்மட்ட பாலம் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி விறுவிறு
கோடங்கிபட்டி உயர்மட்ட பாலம் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி விறுவிறு
கோடங்கிபட்டி உயர்மட்ட பாலம் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி விறுவிறு
ADDED : செப் 04, 2025 01:28 AM
கரூர் :கரூர் -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிபட்டி உயர்மட்ட பாலம் கட்டுமான பணி தொடங்கி, சர்வீஸ் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
கரூரில் இருந்து, சேலம் தேசிய நெடுஞ்சாலை, கரூர் -- திருச்சி நெடுஞ்சாலை பகுதிகளில், கிராமங்களில் இருந்து செல்லும் இணைப்பு சாலைகள் உள்ளன. அந்த சாலையை கடந்து செல்லும் போது, விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடக்கும் போதெல்லாம், அந்த பகுதிகளில் சாலை மறி-யலில் ஈடுபடுவர். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. விபத்து ஏற்படும் பகுதிகளில், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் பெரிச்சிபாளையம் பிரிவு, பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, செம்மடை பிரிவு, தவிட்டுப்-பாளையம் பிரிவு, மண்மங்கலம் பிரிவு ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. அடுத்ததாக, கோடங்கிபட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் பணி தொடங்கவுள்ளது.
இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறியதாவது: திருச்சி -- கரூர் தேசிய நெடுஞ்சாலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், கோடங்கிபட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. இதில், கோடங்கிபட்டியில், 21.50 கோடி ரூபாய் மதிப்பில், 5.5 மீட்டர் உயரம், 15 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்படுகிறது.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாலம் பணி தொடங்குவதற்கு முன், சாலையில் வாகனங்கள் தடையின்றி சென்று வருவதற்கு இரண்டு புறங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து பாலம் கட்டுமான பணிகள் தொடங்கும். இந்த பாலம் பணிகள், ஓராண்டுக்குள் முடிந்து மக்கள் பயன்பாட்டு விடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.