/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அதிகளவு மது குடித்த கட்டட தொழிலாளி பலி
/
அதிகளவு மது குடித்த கட்டட தொழிலாளி பலி
ADDED : ஆக 13, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: மதுரை மாவட்டம், சுப்பிரமணியபுரம் எட்டாவது கிராஸ், மீனாம்பிகை நகரை சேர்ந்த ராஜ குரு மகன் குட்டிமணி, 37. இவர், கரூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். கடந்த, 2 இரவு கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபான கடை சிட்டி பாரில், குட்டிமணி அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார்.
பிறகு, மயங்கி விழுந்த குட்டிமணியை, அருகில் இருந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்-காக சேர்த்தனர். குட்டி மணி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து, குட்டிமணியின் சகோதரர் செல்லபாண்டி,48, கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப்-பதிவு செய்து விசாரிக்கின்றனர்.