ADDED : டிச 27, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை; குளித்தலை அடுத்த நாகனுார் பஞ்., மணச்சணம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ், 29, கட்டட தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த தீபிகா, 23, என்ற கட்டட தொழிலாளியை, நான்கு ஆண்டு களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 15ம் தேதி இரவு 8:00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வெகுநேரமாகியும் வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. தனது மனைவியை காணவில்லை என, கட்டட தொழிலாளி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

