/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெல் வயல்களில் கிடுக்கி வைத்து எலிகளை கட்டுப்படுத்தும் பணி
/
நெல் வயல்களில் கிடுக்கி வைத்து எலிகளை கட்டுப்படுத்தும் பணி
நெல் வயல்களில் கிடுக்கி வைத்து எலிகளை கட்டுப்படுத்தும் பணி
நெல் வயல்களில் கிடுக்கி வைத்து எலிகளை கட்டுப்படுத்தும் பணி
ADDED : டிச 27, 2025 05:04 AM
கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் பகுதியில், நெல் சாகுபடி வயல்களில் எலி தொல்லைகளை தடுக்கும் வகையில், கிடுக்கி வைக்கும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம், மேட்டுமகாதானபுரம், நந்தன்கோட்டை, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, ஆந்திரா பொன்னி ரக நெல் சாகுபடி நடந்து வருகிறது. வயல்களில் நெற்கதிர்கள் விளைச்சல் கண்டுள்ளது. இதனால் வயல்களில் எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. விளைச்சல் அடைந்த கதிர்களை எலிகள் நறுக்கி விடுகிறது. இதனால் விளைச்சல் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை தடுக்கும் வகையில், விவசாயி கள் இயற்கை முறையில் எலி கிடுக்கி வைத்து, அதன் மூலம் எலிகளை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.எலி கிடுக்கி வைக்கும் போது, எலிகள் வயல்களின் உள்ளே செல்லாமல் வரப்பு கரைகளில் மட்டும் சுற்றி விட்டு வெளியே செல்கிறது. இதன் மூலம் நெல் வயல்கள் பாதுகாக்கப்படுகிறது.