/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் லட்சார்ச்சனை
/
கரூர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் லட்சார்ச்சனை
ADDED : டிச 27, 2025 05:03 AM

கரூர்; கரூர், பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்கம் சார்பில், பசுபதீஸ்வரா ஐயப்பன் கோவில் முன், நேற்று லட்சார்ச்சனை பூஜை நடந்தது.
கரூர் பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்கம் சார்பில், நேற்று முன்தினம் ஐயப்பன் கோவில் முன், 39வது ஆண்டு விழாவையொட்டி கொடியேற்று விழா, தசாவதார ேஹாமம், மகா லட்சுமி ேஹாமங்கள் நடந்தன. நேற்று காலை, அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்களை எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர், ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம், ஏக தின லட்சார்ச்சனை பூஜை நடந்தது. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து குத்துவிளக்கு பூஜை நடந்தது. அதில், ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்றனர். பிறகு, பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது.

