/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவில் திருப்பணி குறித்து ஆலோசனை கூட்டம்
/
கோவில் திருப்பணி குறித்து ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 01, 2026 04:45 AM
கரூர்: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட முன்னுார் பஞ்சா-யத்தில் உள்ள, மோளபாளையம் மரகதீஸ்வரர் மரகதவல்லி கோவில் திருப்பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அரவக்குறிச்சி தி.மு.க., எம்.எல்.ஏ., இளங்கோ தலைமை வகித்தார். கோவில் திருப்பணி மேற்கொள்வது குறித்து ஆலோ-சனை வழங்கப்பட்டது. கோவில் திருப்பணியை சிறப்பாக செய்து முடித்திட வேண்டுமென திருப்பணி கமிட்டியில் முடிவு எடுக்கப்பட்டது.
க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலர் கார்த்திக் உள்பட பலர் பங்-கேற்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் குலைகள் தயார் எருமப்பட்டி: பொங்கல் பண்டிகைக்கு, வெளி மாவட்டங்களுக்கு விற்ப-னைக்கு கொண்டு செல்ல பயிரிட்ட மஞ்சள், தற்போது நன்கு விளைந்து பச்சை பசேலென காணப்படுகிறது.
எருமப்பட்டி யூனியனில் பவித்திரம், நவலடிப்பட்டி, கஸ்துாரிப்-பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். இந்த மஞ்சள் செடிகள், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை குறிவைத்தே விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மஞ்சள் குலைகள், சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது, இந்த மஞ்சள் செடிகள், அறுவ-டைக்கு தயார் நிலையில் உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ளதால், மஞ்சள் கொத்துகளில் அதன் இலைகள் காயாமல், பச்சை பசேலென இருப்பதற்காக, தினமும் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
இதுகுறித்து, மஞ்சள் விவசாயி பன்னீர் கூறியதாவது: பொங்கல் பண்டிகை அன்று மஞ்சள் குலைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக மஞ்சள் பயிரிட்டு வரு-கிறேம். இந்தாண்டு பொங்கல் பண்டிகை வர உள்ளதால், அதன் நிறம் மாறாமல் இருக்க செடிகளுக்கு தண்ணீர் விட்டு பராமரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

