/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தடப்பள்ளி வாய்க்கால் ஷட்டரில் பழுது சீரமைக்க நீர்வள ஆதாரத்துறை முடிவு
/
தடப்பள்ளி வாய்க்கால் ஷட்டரில் பழுது சீரமைக்க நீர்வள ஆதாரத்துறை முடிவு
தடப்பள்ளி வாய்க்கால் ஷட்டரில் பழுது சீரமைக்க நீர்வள ஆதாரத்துறை முடிவு
தடப்பள்ளி வாய்க்கால் ஷட்டரில் பழுது சீரமைக்க நீர்வள ஆதாரத்துறை முடிவு
ADDED : ஜன 01, 2026 04:44 AM
கோபி: தடப்பள்ளி வாய்க்கால் தலைமதகு கட்டமைப்பில் உள்ள, ஷட்-டரில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க, நீர்வள ஆதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வளாகத்தில் உள்ள தடப்-பள்ளி-வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. கடந்த அக்.,24 முதல், 2026 பிப்., 20 வரை, மொத்தம் 120 நாட்களுக்கு, இரண்டாம் போக பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. அந்நீரை கொண்டு விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.கடந்த, 1855ல், இரு பாசனங்களுக்கும் கொடிவேரி தடுப்ப-ணையில் தலைமதகு கட்டப்பட்டது, அதன்பின் கடந்த, 1919ல், திருகாணிக்கதவு அமைப்புடன், தலைமதகு வடிவமைக்கப்பட்-டது. தடப்பள்ளி பாசனத்தின் தலைமதகில் ஆறு ஷட்டரும், அரக்-கன்கோட்டை தலைமதகில் ஐந்து ஷட்டர்களும் உள்ளன. அதை பாசன உதவியாளர்கள், திருகாணிக்கதவை பத்து முறை, கையால் சுழற்றினால், ஒரு அடி அளவுக்கு, ஷட்டர் திறந்து தண்ணீர் வெளி-யேறும்.
அந்த முறையை எளிதாக்கி நவீனப்படுத்தும் விதமாக, இரு வாய்க்காலிலும் உள்ள 11 ஷட்டர்களை. மின் மோட்டார் மூலம் திறக்கும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், தடப்பள்ளி வாய்க்கால் தலைமதகு ஷட்டர்-களில், ஒரு ஷட்டரில் ஏற்பட்ட பழுதால், அதை நைலான் கயிறு கொண்டு கட்டி பயன்படுத்துகின்றனர். இதனால் அதை சீரமைக்க நீர்வள ஆதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அதன் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஷட்டரை பராமரிப்பு பணி மேற்கொள்வது குறித்து, துறை ரீதியாக அறிக்கை அனுப்பி-யுள்ளோம். பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தியதும், அதற்கான பணிகள் நடக்கும்' என்றார்.

